(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
இதுவரை: அத்யாயம் 1
அவன் பிணத்தை இழுத்து ஆற்றோடு அனுப்பி விட்டார்கள். ஊர் கட்டுப்பாட்டால் அக்கொலை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது. இதற்கு நகாசு வேலை யெல்லாம் செய்து நீட்டி முழக்கி மூன்று நாளில் சொல்லி முடித்தார்.
எல்லாரும் கதையை கதையாக மட்டுமே கேட்டுவிட்டு வேற வேலைய பார்க்கறப்ப வாணி மட்டும் கதையில் மூழ்கி விடுவாள். தன்னை அந்த பாதிப்புக்குள்ளான நபராகவே எண்ணிக்கொள்வாள். காந்திமதியிடம் மீண்டும் மீண்டும் வாணி கேட்டாள்,”படுகொலையானவன் எப்படி வருவான்; ஆவியா வருவானா”
விளைவு – மனப்பாதிப்பு அடைந்து விட்டாள்.
எப்போதும் எதையோ பறி கொடுத்தவள் போல் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூப்பிட்டால் திரும்ப மாட்டாள். ஏதும் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள். சாப்பிட மாட்டாள். விதவிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டவள், எந்த ஈடுபாடும் காட்டமலிருந்தாள். திடீரென்று அழுவாள், சிரிப்பாள், அழுது கொண்டே சிரிப்பாள். கைகளையும் கால்களையும் ஒரு மாதிரி முறுக்கிக்கொள்வாள். நூறு மீட்டர் ஓட்டம் ஓடி வந்தவள் போல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். திடீரென பத்ர காளிபோல கண்களை விரித்து விழிகளை உருட்டுவாள்; பார்க்கவே பயமாக இருக்கும்.
பார்ப்பவரெல்லாம் அவளுக்கு பேய்தான் பிடித்திருக் கிறதென்று சத்தியம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
உள்ளூரில் இளைய பெருமாள் என்பவர் இருந்தார். அவர் ஒரு பேயோட்டி. அவரை இளையான் என்றே இனி குறிப்பிடுவோம்.
உடுக்கை எடுத்தால் விடிய விடிய அடித்து பாட்டுபாடி சாமியை வரவழைப்பார், பேயை ஓடஓட விரட்டுவார். இதற்காக மலையாள நாட்டுக்கு போய் மலையாள மாந்திரிகம் கற்று வந்ததாக சும்மா சும்மா சொல்வார். அடிக்கடி வாரக்கணக்கில் காணாமல் போய்விடுவார். ஊருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் கொள்ளிடம் ஆறு. அதற்கப்பால் உள்ள தூத்தூர், வப்பூர், கோமான், குருவாடி போன்ற ஊர்களில் இருந்து வந்து அவரை பேயோட்டிட அழைத்துப் போய்விடுவர்.
வாணியின் அப்பா இளையானிடம் தன் மகளின் நிலை குறித்து கூறி,
“என்ன செய்யலாம்” எனக் கேட்டார்.
“ஐயா இப்போ எதுவும் உறுதியா நாமாக சொல்ல முடியாது; ராத்திரி வூட்டுக்கு வர்ரேன், உடுக்கடிச்சி கேட்டு முடிவு பன்னுவோம்” என்று அன்று இரவுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார்.
உடுக்கடி இளையான் வாணி வீட்டுக்கு வந்தார். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் விடிகாலை நாண்கு மணி வரை தொடரும். பல மணி நேரம் உடுக்கை அடித்தும் வாணியிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவளை பிடித்திருக்கும் ஆவி அவள் மேல் வரவில்லை. ஒரு கட்டத்தில் இளையான் சோர்வடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். வாணி வீட்டில் தந்த பாலைக் குடித்து விட்டு, ஒரு தடவை வெற்றிலை சீவல் புகையிலை போட்டு குதப்பினார்.
“எவ்வளவோ பார்த்திருக்கேன், இது மாதிரி அழுத்தமா இருக்கறதை பார்த்ததேயில்லை” என்றார்
“இளையான், இப்போ என்ன செய்யறதா உத்தேசம்; ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா” வாணியின் அப்பா.
” நம்ம கிட்ட தப்பிக்க முடியுமா? என்றார் இளையான்”என்ன நடக்கும்””இப்பவே சொல்ல முடியாது. இப்போ ரெண்டாவது மந்தை உடுக்கடியிலதான் தெரியும் என்னா நடக்குமுன்னு “.இதைக் கேட்ட வாணியும் அவள் குடும்பமும் என்ன நடக்குமோவென்று கிலி பிடித்து நின்றார்கள்.
நாளை தொடரும்…….
முதல் நாள் கதையை நினைவில் வைத்துக் கொள்ள முடியாததால் சிரமமாக இருக்கிறது
LikeLiked by 1 person
இதுவரை ..அத்யாயம் 1 என்று தொடக்கத்திலேயே உள்ளது
LikeLike