சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள வரம் எனலாம். இவரைப் பற்றி 25.ஆகஸ்ட்டில் என்னுடைய கதைசொல்கிறேன்.காம் வலைதளத்தில் பதிவிட்டதுடன் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன்.
கூடுதல் செயய்தி:
ககன்தீப் சிங் பேடி அவர்கள் திருச்சியில் இருந்த போது பல ஆக்கிரமிப்புகளை மீட்டவர். எந்த துறைக்கு மாற்றினாலும் மக்கள் நலனை முன்னிறுத்திக் கொள்வார். தானே புயல் தாக்கிய போது அரசாங்கத்தை எதிர்பார்க்காமால் தன் சொந்த முயற்சியில் சொந்த ஊரிலிருந்து நிதி திரட்டி மக்களுக்கு உதவியவர்.
21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் (முல்லைப் பெரியார் அணையைக் கட்டியவர்)
கலெக்டர் திரு. ககன்தீப் சிங் பேடி…!!!
நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.
மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரி கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம்,“நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன.
அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். மீண்டும் ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்றார். திட்டத்துக்கான செலவை என்.எல்.சி ஏற்கவேண்டும்.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் என்.எல்.சி திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.
அவர் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
“12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும்.
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா விவசாயிகள் வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது. ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
‘ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்’னு சொன்னாங்க.
எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். இரவுபகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.
ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.” என்றார்
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால், 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திட்டத்துக்கு வித்திட்ட திரு. ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளராக இருக்கிறார்.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.
பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் நமது பங்காளிகளே.
(நன்றி: இரா. சுந்தர மூர்த்தி, Admin, தெரிந்து கொள்வோம் (Let us know) முகநூல் குழு.)
சுகன்தீப் சிங் பேடி அவர்கள் திருச்சியில் இருந்த போது பல ஆக்கிரமிப்புகளை மீட்டவர். எந்த துறைக்கு மாற்றினாலும் மக்கள் நலனை முன்னிறுத்திக் கொள்வார். தானே புயல் தாக்கிய போது அரசாங்கத்தை எதிர்பார்க்காமால் தன் சொந்த முயற்சியில் சொந்த ஊரிலிருந்து நிதி திரட்டி மக்களுக்கு உதவியவர். இவர் போன்ற அதிகாரிகள் நிறைய வருவார்கள் என்று நம்புவோம்.
LikeLiked by 1 person
🙏கூடுதல் செய்தி.மிக்க நன்றி. பதிவிடுமுன் சிலரிடம் கலந்தாலோசிக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.
எனி வே நன்றி வேம்பு.
LikeLike